Breaking News

பிக்பாஸ் வீட்டில் சுசித்ரா; அர்ச்சனாவுக்கு, குருப்புக்கு ஆப்பு?


பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்று 28வது நாள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பாடகர் வேல்முருகன் வெளியேறுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஒரு பாடகர் வெளியேறும் நிலையில் உள்ளே ஒரு பாடகி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகிறார். 

பாடகி சுசித்ரா ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் உள்ளன.   
இந்த சீசன் குறித்து கமல்ஹாசனிடம் சுசித்ரா கூறும்போது, ‘ஒவ்வொரு சீசனை விட இந்த தடவை போட்டி ரொம்ப கடுமையாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் சுசித்ரா. சுசித்ராவின் வருகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நிலையில் அர்ச்சனாவின் முகத்தின் தோன்றும் ரியாக்சனை பார்க்கும்போது அவருக்கு கடுமையான போட்டியாளர் வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.   

ஏற்கனவே அர்ச்சனா குருப்புக்கு எதிராக ஆரி தலைமையில் ஒரு குரூப் தோன்றிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுசித்ராவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.