Breaking News

கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்!


புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பழைய மெனிங் சந்தையிலும் 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளிலும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார். 

அத்துடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.