யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி! - THAMILKINGDOM யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி! - THAMILKINGDOM

 • Latest News

  யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி!

  லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் காலி க்ளேடியேடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டெலியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.  

  இதன்படி, காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

  அணி சார்பாக, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அப்ரிடி 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் குணதிலக 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.  

  பந்துவீச்சில், யாழ்ப்பாண அணி சார்பாக ஒலிவியர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் வனிந்து ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் திசர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

  176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.  

  துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஸ்க பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.. சொயிப் மலிக் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் போட்டியின் ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்ணான்டோ தெரிவானார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top