தடை உடைத்து யாழில் மாவீரர்களிற்கு நினைவேந்தல்! - THAMILKINGDOM தடை உடைத்து யாழில் மாவீரர்களிற்கு நினைவேந்தல்! - THAMILKINGDOM

 • Latest News

  தடை உடைத்து யாழில் மாவீரர்களிற்கு நினைவேந்தல்!

  துப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது. வடமராட்சி எள்ளங்குளத்தில் சுடரேற்ற இளைஞர்கள் மீது படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். 

  மாவீரர் துயிலுமில்ல வீதிகளில் தடை போட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்க அதனை தாண்டி வீடுகள் தோறும் மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 
  இதனிடையே யாழ் ஆயர் இல்லத்துக்கு முன்னால் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வினை செய்ய முற்பட்டார் என கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  குருமட அதிபரான இளவாலை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற கிறிஸ்தவ மத குருவே கைதாகியுள்ளனர். இதனிடையே அரசியல் தலைவர்கள் பலரும் தமது வீடுகளில் சுடரேற்றி மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தடை உடைத்து யாழில் மாவீரர்களிற்கு நினைவேந்தல்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top