Breaking News

திருந்த வாய்ப்பில்லை: மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த 'இரண்டாம் குத்து' இயக்குனர்!

தொடர்ச்சியாக அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்திற்கு பாரதிராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நீதிமன்றமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தோஷம் ஜெயகுமாரின் அடுத்த பட டைட்டில் குறித்து அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு Mr.வெர்ஜின்’ என்ற டைட்டிலை சந்தோஷ்குமார் வைத்துள்ளார். 

முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அவர் நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் நெட்டிசன்கள் கருத்து கூறிய போது சந்தோஷ்குமார் திருந்த வாய்ப்பு இல்லை என்றும் தொடர்ந்து ஆபாச படங்களையே அவர் இயக்குவார் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.