ஆரவ் திருமணம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஓவியா!
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு சமீபத்தில் நடிகை ராஹே என்பவருடன் சிறப்பாக திருமணம் நடந்தது என்பதும், இந்த திருமணத்தில் காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, ஹரிஷ் கல்யாண் உள்பட பலர் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை ஒருதலையாக காதலித்த நடிகை ஓவியா, இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா, இந்த திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என மனம்திறந்து கூறியுள்ளார்.
நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, ‘ஆரவ்வின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இப்போது அவருக்கென ஒரு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது. இனி மீண்டும் அதைப்பற்றி கேட்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். ஓவியாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.