Breaking News

மீண்டும் டாஸ்க்கில் சொதப்பும் பாலாஜி: புலம்பும் சனம்!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒருசில டாஸ்குகளில் சொதப்பி வரும் பாலாஜி இன்று மீண்டும் சொதப்பியுள்ளதால் சக போட்டியாளர்கள் குறிப்பாக சனம் புலம்ப ஆரம்பித்துவிட்டார். 

மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அணி மாற வேண்டும் என்ற நிலையில் சனம், நிஷா, அனிதா அணியின் நேரம் முடிவடைந்து பாலாவின் அணியின் நேரம் ஆரம்பித்தும், பாலா தூங்கி கொண்டிருந்தார். அவரை அவரது அணியில் உள்ள ரம்யா எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் அனிதா வந்து எங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியபோது, ‘ஏன் டென்ஷன் ஆகுறீங்க, இப்படியெல்லாம் கூப்பிட்டால், நான் வரவே மாட்டேன்’ என்று கூறியதை அடுத்து அனிதா அதிருப்தி அடைகிறார். இன்னொரு பக்கம் நேரம் முடிவடைந்தும் பாலா அணியினர் வராததால் சனம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.  

ஏற்கனவே தூங்கும்போது தன்னை வேல்முருகன் எழுப்பியதாக பாலாஜி பிரச்சனை செய்தார் என்பதும், பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்கில் பாலாஜியால் டாஸ்க் ஒட்டுமொத்தமாக வேறு திசை திரும்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டாஸ்க் விதிமுறைகளை மீறி வரும் பாலாஜியால் ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தியில் உள்ளனர்.