சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி வௌியானது!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்ந்து பிற்போடப்பட்டு வந்தது.
இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திகதியும் பிற்போடப்பட்டிருந்தமை கூறத்தக்கது.








