Breaking News

எவிக்சன் ஆன பிறகு சனம்ஷெட்டியின் முதல் வீடியோ: வைல்ட்கார்ட் எண்ட்ரியா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்ட நிலையில் அவரது வெளியேற்றத்தால் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சனம்ஷெட்டியின் எவிக்சனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டெக் ஒன்றை உருவாக்கிய ரசிகர்கள் அதனை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம்ஷெட்டி முதல்முதலாக வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:   

அனைவருக்கும் வணக்கம்! முதலில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு நான் என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வேண்டியிருந்தது. மேலும் மூன்று மாதமாக சரியாக சாப்பாடு தூக்கம் இல்லை என்பதால் ஓய்வு எடுத்தேன். அதனால்தான் உங்களை சந்திக்க காலதாமதம் ஆகிவிட்டது.   

என்னுடைய பிக்பாஸ் பயணத்தில் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து எனக்காக வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் மிக்க நன்றி. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் எனக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றி. சனம் ஷெட்டிக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நான் இத்தனை வருடமாக தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு உங்கள் மனதில் நான் இடம் பிடித்துள்ளேன். இதைவிட பெரிய அங்கீகாரம் எனக்கு தேவையில்லை.   

இந்த ஒரு வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கு எனது நன்றி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்கு ஆதரவாக இருந்த ஹேஷ்டேக்குகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். என்னால் நம்பவே முடியவில்லைல். அந்த அளவுக்கு எனக்கு நீங்கள் அன்பு கொடுத்து உள்ளீர்கள். பிக்பாஸ் பயணம் வேண்டுமானால் முடிந்து இருக்கலாம். ஆனால் என்னுடைய கேரியர் இனிமேல்தான் ஆரம்பம் ஆகிறது. இன்றுபோல் தொடர்ந்து எனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என சனம் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.  

சனம்ஷெட்டியின் இந்த வீடியோவை அடுத்து அவர் வைல்ட்கார்ட் எண்ட்ரி இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது