Breaking News

குரூப்பிஸம் என்றால் என்ன? ரியோவுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற பந்து டாஸ்க்கில் ஆரி மற்றும் ரியோ இடையே க்ளைமாக்ஸில் கடும் வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங் பிரிக்கும்போது முதலாவது இடத்திற்கு ஆரி மற்றும் ரியோ கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அந்த வாக்குவாதத்தில் நடந்த மனக்கசப்பு மோசமான போட்டியாளரை தேர்வு செய்வதிலும் எதிரொலித்தது. 

மோசமான போட்டியாளராக ரியோவை தேர்வு செய்த ஆரி, ரியோ விளையாடும்போது நிறைய பிரச்சினைகள் இருந்ததாக அவரே கூறியதாக கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரியோ, தான் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை என்று கூறினார்.    

இதனை அடுத்து மோசமான போட்டியாளருக்கு ஆரியை ரியோ நாமினேட் செய்தபோது, ஆரி ஒரு விளக்கம் கொடுக்க முயன்றார். அப்போது விளையாட்டில் குரூப்பிஸம் இருக்கக்கூடாது தனித்தன்மையோடு விளையாட வேண்டும் என்றும் அது விளையாட்டு விதிகளில் கூறப்பட்டிருப்பதாக கூறினார்.   

அப்போது ரியோ, குரூப்பிஸம் என்று ஏன் கூறினீர்கள் என்று நீங்கள் கேட்க, அதற்கு ஆரி, விதிகளில் சொல்லப்பட்டதை தான் நான் சொல்கிறேன் என்று கூறி விதிமுறை புத்தகத்தை எடுத்து ’கூட்டமாக சேர்ந்து விளையாடாதீர்கள், தனித்தன்மையுடன் விளையாடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காடி, கூட்டமாக விளையாடுவதற்கு ஆங்கிலத்தில் குரூப்பிஸம் என்று பொருள் என ரியோவுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.