Breaking News

மீண்டும் சூடுபிடித்த இலங்கை இளைஞனின் ஜப்பான் காதலி விவகாரம்!


ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளான சிறுமியை இலங்கைக்கு அழைத்துவந்து திருமணம் செய்த இலங்கை இளைஞனின் உறவுக்கார சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் இனந்தெரியாத சிலர் கூரிய ஆயுதத்தால் அந்த இளைஞன் மீதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இலங்கை இளைஞன் ஜப்பான் நாட்டு காதலியை கடத்தி வந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் பிணையில் வந்து சில நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகளான சிறுமியை இலங்கைக்கு அழைத்துவந்து திருமணம் செய்த இலங்கை இளைஞன் தொடர்பான சம்பவம் அண்மைய நாட்களில் பரவலாக பேசப்பட்டது.  

இந்தக் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞனின் தாய், சகோதரி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

அந்த இளைஞனின் சகோதரியின் கணவனும் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  

எவ்வாறாயினும் இந்த யுவதியை இலங்கைக் காதலருக்கு மணம் முடித்துக் கொடுக்க யுவதியின் தாய் இணக்கம் தெரிவித்திருந்தார்.