பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி வீட்டுக்கு போகலையாம்? காட்டுத் தீயாய் பரவும் சீக்ரெட்!
இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை சமூக வலைதளங்களில் காட்டினர். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது சனம் ஷெட்டி அவரது வீட்டிற்கு செல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே இந்த செய்தி 100% உண்மையானது என்றும் அவர் ஒரு சில நாட்களில் மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார் என்றும் சமூக வலைதளங்களில் இந்த சீகரெட் செய்தியானது கசிந்து வருகிறது.
ஏனென்றால் பிக் பாஸ் சீசன்3ல் இயக்குனர் சேரன் சீக்ரெட் ரூமில் அடைத்து போல, இந்த தடவை சனம் ஷெட்டியை அவ்வாறு செய்யப்போவதாக பிக்பாஸ் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
எனவே சனம் ஷெட்டி மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றால், நிச்சயம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரணகளமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.