‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபலம்? - THAMILKINGDOM ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபலம்? - THAMILKINGDOM
 • Latest News

  ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபலம்?

   


  கமல்ஹாசன்  தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. 

  அதன்படி நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி பிரியங்கா, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, ஷகீலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி பிரபலம் கனி ஆகியோரது பெயர்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது மாஸ்டர் பட பிரபலம் சிபி சந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.  இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபலம்? Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top