மாணவர்களுக்கு நோய் அறிகுறி காணப்படுமாயின்பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! - THAMILKINGDOM மாணவர்களுக்கு நோய் அறிகுறி காணப்படுமாயின்பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! - THAMILKINGDOM

 • Latest News

  மாணவர்களுக்கு நோய் அறிகுறி காணப்படுமாயின்பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!  மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

  கொழும்பில் நேற்றைய தினம்  (25) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாடசாலை ஊடாக கொரோனா பரவுவதைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.

  மேலும் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்திலிருந்து மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரையும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்திற்கும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை வழங்குமாறு பரிந்துரைப்பதாகவும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாணவர்களுக்கு நோய் அறிகுறி காணப்படுமாயின்பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top