Breaking News

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரசின் அறிவித்தல்!

 


இலங்கையில்  தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.