Breaking News

நேற்றைய தினம் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 


நேற்றையதினம் நாட்டில்   தினம் 737 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 554,459 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 525,560 ஆக அதிகரித்துள்ளது.