Breaking News

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு!



 அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த அரசாங்கத்தோடும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்காக கதவுகளை மூடியதில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விடுத்த அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கூட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சிறிதரன் கூறினார்.