வடக்கு கிழக்கு முதலமைச்சர் ஆவேன் என கூறி மக்களை ஏமாற்றுகின்றார் சாணக்கியன் – கஜேந்திரன்
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மக்களை ஏமாற்றுவதற்காக இணைந்த வடகிழக்கு முதலமைச்சர் என்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.