Breaking News

கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு!



இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 42 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது.