Breaking News

பேருந்து கட்டணம் 22 சதவீதத்தால் அதிகரிப்பு!

 


இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22% ஆல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 1 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதன் பிரகாரம் இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

“பேருந்து கட்டணத்தை திருத்தும் தேசிய கொள்கையின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நான்கு முறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

நான்கு சந்தர்ப்பங்களிலும் எரிபொருள் விலை உயர்வை மட்டுமே அளவுகோலாகப் பயன்படுத்தினோம். எவ்வாறாயினும், வருடாந்த பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் ஜூலை முதலாம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக 12 காரணிகளின் கீழ் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கணக்கீடுகளின்படி, பஸ் கட்டணம் 32.04% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். 

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. கணக்கீடுகளின் படி, 24.76% அதிகரித்திருக்க வேண்டியிருந்தது. எனினும் அமைச்சரின் ஒப்புதலின் கீழ் 35% அதிகரிக்கப்பட்டது. அதன்படி, 21.85% ஆக பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும். தோராயமான கணக்கீட்டின்படி, பஸ் கட்டணம் 22% அதிகரிக்கப்படும். 

அதன்படி, குறைந்தபட்ச கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக உயர்த்தி உள்ளோம். அனைத்து வீதிகளினதும் பஸ் கட்டணங்களும் இன்று இரவு வௌியிடப்படும். அதன்படி இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கும் பொருந்தும். "