காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்நிலையில், ஊடகவியலாளர் உட்பட அனைவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Hanaa Singer Hamdy கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்போருக்கு, நடைபெறும் போராட்டங்கங்கள் தொடர்பாக ஆராய உரிமை இருப்பதாகவும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.