Breaking News

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை, நீக்கி, அந்த பதவிக்கு திலங்க சுமத்திபாலவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.