Breaking News

"மண்டவுஸ்" புயல் கரையை கடந்தது!

 


தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "மண்டவுஸ்" புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது.

இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, நாட்டின் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் இதன் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழைப் பெய்யக் கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது கி.மீ. சுமார் 50-60 வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.