Breaking News

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்!

 


உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

உள்நாட்டு இறைவரி சட்டம் 2023 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.