Breaking News

உள்ளங்கை, உள்ளங்கால் அதிகமாக வியர்க்க காரணமும் அதற்கான சித்த மருத்துவமும்...

 


வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதற்கு 'ஹைப்பர் ஹைட்ரோசிஸ்' என்று பெயர். உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis). இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் இயல்புடையதாக அமைகிறது. உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.

இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் அவதியுறுவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்க்க வேண்டும். 

சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும். 

இதற்கான சித்த மருந்துகள்: 

1) சங்கு புஷ்பம் மலர் 2, இஞ்சிச்சாறு சிறிதளவு, தேன் சிறிதளவு, ஒரு டம்ளர் தண்ணீர். இவைகளைக் காய்ச்சி, காலை, இரவு குடிக்க வேண்டும். 

2) நன்னாரி மணப்பாகு அல்லது சர்பத் காலை, மாலை 10 மி.லி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

 3) சிறுநாகப்பூ 1 அல்லது 2 எடுத்து அதை வறுத்து, பொடித்து தேன் அல்லது சர்க்கரையுடன் இருவேளை கொடுத்து வந்தால், உள்ளங்கால், உள்ளங்கைகளில் வருகின்ற அதிகவியர்வை குணமாகும். ஹைப்பர் தைராய்டு, ரத்த சர்க்கரை அளவு குறைதல், இதய நோய்களில் வரும் அதி வியர்வையைத் தடுக்க அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.