Breaking News

பாலிவுட் நடிகையுடன் இணையும் கமல்ஹாசன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!




 கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது.

 ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 'கேஎச்234' படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படத்தில் கமல்ஹாசனோடு பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகை வித்யா பாலன், அஜித் நடிப்பில் வெளியான 'நேர்க்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.