Breaking News

தளபதி 68 அப்டேட் கொடுத்த ஜீவா!

 


வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

 மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்திருக்கின்றனர். 

இந்நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனக்கூறி விஜய் ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தளபதி 68 அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த ஜீவா,விரைவில் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.