Breaking News

நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?

 


நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு. 

பேரீச்சை பழத்தில் சர்க்கரை சத்து இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் பேரிச்சம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம். 

தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் .

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நார்ச்சத்து தேவை என்பதால் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கூறப்படுகிறது.

webdunia tamil