பேராசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு அரசின் பதில்!
ஜனாதிபதியுடன் கலந்துரையாடுமாறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியின் செயலாளர் இணங்கியுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூன்று தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னணியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் புதிய நிபந்தனைகளை விதித்து உயர்தர விடைத்தாள் மதிப்பீடு செய்வதை தவிர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.