Breaking News

வெற்றி இலங்கைக்கு கிடைக்குமா?

 


இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் 4 ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது 2 வது இன்னிங்ஸிற்காக இன்றைய நாள் நிறைவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 54 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது 1 வது இன்னிங்ஸிற்காக அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 492 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.