அரச மருத்துவமனைகளில் 112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆயிரத்து 347 வகையான மருந்துகளில், 150 வகையான மருந்துகளுக்கு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.