Breaking News

ஜோதிட சாஸ்த்திரத்தில் வீட்டில் குருவிகள் கூடு கட்டுவது நல்லதா?கெட்டதா?

 


இந்து மதத்தில், மரங்கள், செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம். அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள், ஆள் புழக்கம் இல்லாத பகுதிகளில் பொதுவாக கூடு காட்டும். இதை பார்த்து பல முறை நாம் ரசித்திருப்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டில் பறவைகள், புறாக் கூடுகள் அல்லது தேனீக்களின் கூடு நமக்கு சில முக்கியமான சமிக்ஞைகளை கொடுப்பதாக கூறப்படுகிறது. ஷகுன் சாஸ்திரத்தில் பறவைகளுடன் தொடர்புடைய சில மங்களகரமான மற்றும் அசுப அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வீட்டில் பறவை கூடு காட்டினால் சுபமா?... அசுபமா? என்பதை இங்கே பார்க்கலாம்.

சிட்டுக்குருவி கூடு :

வீட்டில் பறவைகள் அல்லது குருவிகள் கூடு கட்டுவது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மங்களகரமானது என்று ஜோதிடம் நம்புகிறது. சிட்டுக்குருவி கூடு கட்டும் வீட்டில், மகிழ்ச்சியும் செழிப்பும் வரும், வீடு ஆசீர்வதிக்கப்படுகிறது, துரதிர்ஷ்டமும் அதிர்ஷ்டமாக மாறும்.

புறா கூடு :

வீட்டில் புறா கூடு கட்டுவது வீட்டில் வசிப்பவர்களுக்கு பணம் வருவதற்கான அறிகுறியாகும். புறா லட்சுமி தேவியின் பக்தராகக் கருதப்படுகிறது. அதனால் தான் வீட்டில் புறா கூடு வைப்பது மங்களகரமானது. புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் என்பது நம்பிக்கை.

வீட்டிற்குள் வௌவால் வந்தால்?

வௌவால்கள் தனியாகவும் பாழடைந்த இடங்களிலும் வாழும் பறவைகள். ஒருவரின் வீட்டில் வௌவால் கூடு கட்டினால் அது அவருக்கு அசுபமாகவே கருதப்படும். வௌவால்கள் வீட்டுக்குள் வருவது நல்லதல்ல. எதிர்காலத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

தேன்கூடு :

பல சமயங்களில் நம் வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நல்லது அல்ல. உங்கள் வீட்டிலும் தேனீ கூடு இருந்தால் அதை உடனே அகற்றாவிட்டால் பெரிய விபத்தை ஏற்படுத்தும். இந்த தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. உங்களின் நம்பிக்கையின் பெயரில் நீங்கள் இந்த விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம்.