Breaking News

பிரித்தானியாவில் இடம்பெற்ற மே 18 இனவழிப்பு நிகழ்வு

உலகளாவிய ரீதியில் இன்று  வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இறுதி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO என்பன ஒன்றிணைந்து நினைவுகூர்ந்தனர்.

பிரித்தானியா ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்கும் முகமாக ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.





குறித்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேபோல பிரித்தானிய தமிழர்பேரவை ட்ரபல்கார் சதுக்கத்தில் 18/05/2023 அன்று மாலை தனது அமைப்பு சார்பான நிகழ்வை நடத்தியிருந்தது.

இதேவேளை பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளி வாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி வணக்கம் செலுத்தினர்.