Breaking News

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது!

 


வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்,

விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றை யதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

அதன்படி கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;

இதேவேளை ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றய தினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.