கவினுடன் ஜோடி சேரும் சசிகுமார் பட நடிகை!
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. அயோத்தி இப்படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இவர் 2020-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ப்ரஷர் குக்கர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அயோத்தி படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அடுத்ததாக கவினுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அயோத்தி இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'கிஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.