இலங்கையிடம் நட்டஈடு கோரியுள்ள இந்தியா!
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டைமண்ட் கப்பலும் விபத்துக்கு உள்ளாகிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.