Breaking News

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

 


சென்னை, வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இங்குள்ள விலங்குகளைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர்கள், அந்த விலங்குகளுக்குரிய உணவு மற்றும் பராமரிப்புச் செலவை அளிக்கலாம். 

இவ்வாறு செலவிடும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பூங்காவை இலவசமாக சுற்றிப் பார்த்தல் போன்றசலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் உள்ள ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் யானை, புலி போன்றவற்றை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.