Breaking News

முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா..?

 


பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை. 

முட்டையின் மஞ்சள் கரு மேல் இந்தப் பழி ஏன் வந்தது? அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் எனும் பொருளால் மட்டுமே அது தீண்டத்தகாத பொருளாக மாறி நிற்கிறது. 

முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் ஏ - கண் நலத்திற்கும்  கல்சியம் / விட்டமின் டி என்பன  எலும்பு நலத்திற்கும்  பொட்டாசியம் / மெக்னீசியம் ஆகின  இதய நலத்திற்கும் விட்டமின் பி6 / பி12 போன்றவை நரம்பு மண்டல நலன் ஆகிய பல நன்மைகளையும் கொண்டிருக்கிறது முட்டை மஞ்சள் கரு .

எனவே கொலஸ்ட்ரால் இருக்கும் ஒரே ஒரு காரணத்துக்காக மஞ்சள்கருவை தவிர்த்தால் அதனில் இருக்கும் ஏனைய சத்துக்களை எம்மால் பெறமுடியாது.