பாம்பு பற்றிய கனவுகளும் பலன்களும்!
பொதுவாக நாம் காணுகின்ற ஒவ்வொரு கனவுக்கும் எதோ ஒரு அர்த்தம் இருக்கும் என்பார்கள். அப்படி பாம்பை கனவுகாண்பது எவற்றையெல்லாம் உணர்த்துகிறது என்பது பற்றி மேலும் பார்ப்போம்.
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.