Breaking News

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் அறிவிப்பு!

 


லங்கா சதொச நிறுவனம் இன்றையதினம்  (வியாழக்கிழமை) முதல் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது

மேலும் ஒரு கிலோ கிராம் கடலைப் பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.