Breaking News

பிறந்தநாளில் லியோ கொண்டாட்டத்திற்கு ரெடியான விஜய்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம்ம அப்டேட்!

 



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'ரெடியா?' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 


இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் செம்ம அப்டேட்டை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.