நான் எதிர்பார்த்த நபர் இவர் தான்... காதலை உறுதி செய்த தமன்னா!
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது.
இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது.
தமன்னா நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பழக முடிந்தது. இவர் தான் நான் எதிர்பார்த்த நபர். தமன்னா -விஜய் வர்மா நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன்.
பொதுவாக ஒரு பெண் அவரது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்" என்று பேசினார்.