லியோவில் இணைந்தமற்றுமொரு இயக்குனர்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுராக் காஷ்யப் இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.