Breaking News

பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்க திட்டம் - சுசில் பிரேமஜயந்த!

 


நாட்டில் புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், மொத்தம் 7,342 புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக, பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என கூறியுள்ளார்.