Breaking News

வாராந்தம் 5 கிலோ பிளாஸ்டிக்கை உண்ணும் மனிதன் : ஆய்வில் அதிர்ச்சி!

 


வாராந்தம் 5 கிலோ கிராம் அதாவது ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார இதனை தெரவித்தார்.

உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் எனும் நுண்; துகள்கள் கலந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு நபர் வாரத்திற்கு 5 கிராம் நுண் நெகிழித் துகள்களை உட்கொள்கிறார். அதாவது, ஒரு கடனட்டையின் அளவு நுண் நெகிழித் துகள்களை உட்கொள்கிறார். அதன்படி, ஒரு மாதத்தில் 20 கிராமும் மற்றும் வருடத்திற்கு 250 கிராமும் நுகரப்படுகிறது என மேவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நம் உடலுக்குள் நுண் நெகிழித் துகள்கள் செல்வதற்கு நைலோன் துணி மற்றும் நைலோன் மீன்பிடி வலைகள் முக்கிய காரணங்களாக அமைவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சஜித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெரும்பாலான நுண் நெகிழித் துகள்கள் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் நம் உடலுக்குள் செல்கின்றன என்றார். நுண் நெகிழித் துகள்களை அதிகமாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, தாங்களாகவே பிளாஸ்டிக் பொருட்களை அழிக்காமல், மறுசுழற்சி செய்யும் மையங்களில் ஒப்படைக்குமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையிலான நச்சு இரசாயனங்கள் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றன என மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.