திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட அறிக்கைகள்
யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளரான தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி காலங்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்த, திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்களின் நிகழ்ச்சியினைத் தவிர்க்கும்படி அனைத்துலக ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிளைகளினாலும் உபகட்டமைப்புக்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள திரு.ஏ.ஆர். ரகுமான் அலுவலகத்தில், தமிழீழ ஆதரவு மாணவர்களால் இன்று கையளிக்கப்பட்டது.
ஜெர்மனி மற்றும் பிரான்சில் ஏற்பாடாகிய இசை நிகழ்ச்சிகளை,திரு.ஏ.ஆர். ரகுமான் அவர்கள் ரத்து செய்வீர்கள் அல்லது ஒத்தி வைப்பீர்கள் என்று உறுதியான நம்பிக்கையுடன், தங்களின் நல்ல பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, தமிழீழ விடுதலைக்காய் தம்முயிரீந்த மறவர்களின் நினைவெழுச்சி நாட்களில் ,திரை நட்சத்திரங்களின் நிகழ்வுகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.