சிறப்பாக நடந்தேறிய மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் தேரில் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.