Breaking News

கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் கீரை !

 




பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. அந்தவகையில் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரையானது பழங்காலத்தில் இருந்தே அதிகம் பயன்படுத்தப்பட்ட கீரையாகும். இந்த கீரையை சாப்பிட்டால் நமது உடல் பொலிவு பெற்று பொன்நிறமாக மாறும்.

இதில் இரண்டு வகைகள் உண்டு. சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி . சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. நாட்டுப் பொன்னாங்கண்ணி அதிகமாக மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.

இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி சத்துக்கள் , இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், போன்ற சத்துக்கள் உள்ளன.

பொன்னாங்கண்ணி கீரையில் இருக்கும் வைட்டமின்கள் ஏ சத்து கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தருகிறது.

இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், விழித்திரை நோய், கண் மங்குதல், கண் வலி , ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும்.

மேலும் இந்த கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ 27 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கோளாறுகள் குணமாகும்.

இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்ணாடி, லென்ஸ் அணிய வேண்டிய தேவையே வராது.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிக பாலை சுரக்கச்செய்யும்.

அதுமட்டுமல்லாமல் குடலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தி, கல்லீரலை பாதுகாக்கும். மேலும் மஞ்சள் காமாலை , விழித்திரை நோய், வாதம், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும். ஆண்களுக்கு ஏற்படும் விந்து பிரச்சனையை சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், உடல் சூட்டை தணிக்கும்.

பயன்படுத்தும் முறை:

இதனை துவையல் செய்து தினமும் சாப்பிடலாம் மற்றும் கீரையாகக் கடைந்தும் சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, கண் பிரச்சனை, ஒற்றைத்தலைவலி நீங்கும்.