Breaking News

குழந்தைகளிடையே நோய்கள் பரவும் அபாயம்!

 


தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் குழந்தைகள் இடையே பல்வேறு நோய்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் பெரும்பாலும் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, தெரிவிக்கின்றார்.

எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

வறட்சியான வானிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் பரவக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா  மேலும் தெரிவித்துள்ளார்.