Breaking News

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரி அதிகரிப்பு !



 இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரி உயர்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

துறைமுக மற்றும் விமான நிலைய வரி அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படாது என நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.